பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்றால் 40 நாடுகள் புறக்கணிக்கும் - போலாந்து அமைச்சர்
Poland minister says if Russia participate in Olympics 40 countries will boycott
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற 33வது ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் வீரர்களை பங்கேற்க வைக்கும் திட்டத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கையில் எடுத்துள்ளது. ஐ.ஓ.சி. விதிகளின் படி, பாஸ்போர்ட் அடிப்படையில் எந்த நாட்டு வீரருக்கும் தடை விதிக்க முடியாது என்றும், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் பொதுவான கொடியின் கீழ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளது.
ஆனால் ரஷ்யா ஒலிம்பிக்கில் பங்கேற்றால் பாரீஸ் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் என உக்ரைன் எச்சரித்துள்ளது. மேலும் ரஷ்யாவை ஒலிம்பிக்கில் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாத்வியா, எஸ்தோனியா, போலந்து, லிதுவேனியா ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ரஷ்ய வீரர்கள் கலந்து கொள்வதினால் மற்ற வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாவர்கள் என்றும், உக்ரைன் மீதான போரை திசைதிருப்பும் விதமாக இந்த விளையாட்டு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலந்து விளையாட்டு துறை அமைச்சர் கமில் போட்னிக்சுக் கூறும்பொழுது,
பாரிஸ் ஒலிம்பிக்கை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்பட 40 நாடுகள் ஒன்றிணைந்து புறக்கணிக்க வேண்டும். அவ்வாறு நடக்க வாய்ப்புள்ளது என்றும், அவ்வாறு புறக்கணித்தால் பாரிஸ் ஒலிம்பிக்கின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Poland minister says if Russia participate in Olympics 40 countries will boycott