போலீசார் சோதனை நடத்த சென்ற இடத்தில் குண்டு வெடிப்பு! நடந்தது என்ன?
police went investigate bomb exploded
அமெரிக்கா, வாஷிங்டன் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது திடீரென வீட்டிற்குள் இருந்த நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். பின்னர் அந்த வீட்டில் வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் பல அடி உயரத்திற்கு வெடித்து தீ பிளந்து கிளம்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
மேலும் குண்டு வெடித்ததில் வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கடுமையாக போராடி அணைத்தனர்.
சோதனை செய்வதற்காக சென்ற போலீஸ் அதிகாரிகளுக்கு லேசாக காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டிற்குள் இருந்த நபர் உயிரிழந்துவிட்டாரா அல்லது தப்பி சென்று விட்டாரா என்பது குறித்து தெரியவில்லை.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குண்டு வெடித்த வீட்டிற்குள் இருந்த நபர் வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்து போலீசார் வந்ததும் அதனை வெடிக்க வைத்திருக்கலாம் என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
police went investigate bomb exploded