இலங்கையில் கோழிக்கறி விலை ரூ.1200 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஒரு கிலோ கோழிக்கறியின் விலை ரூபாய் 1200 ஆக உயர்ந்துள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தால் இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் வளர்ந்த நாடுகளின் உதவியுடன் பொருளாதார நிலையை இலங்கை அரசு கட்டமைத்து வருகிறது.

இந்நிலையில் கோழிக்கறி கிலோ 1000 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், தற்போது 200 ரூபாய் உயர்ந்து 1200ஆக விற்கப்படும் என்று இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் 90 சதவீத சிறு மற்றும் நடுத்தர கோழி பண்ணைகள் பொருளாதார வீழ்ச்சியால் மூடப்பட்டுள்ளன என்று சங்கம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து முட்டையின் விலையும் அதிகரிக்கும் என்பதால், கிறிஸ்துமஸ் கேக் விலையும் அதிகரிக்கும் என்று கைத்தொழில் சங்கம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Price of chicken increased to 1200 per kg in srilanka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->