காட்டுமிராண்டித்தனமான அரசு! இனப்படுகொலைக்கு குரல் குடுக்க வேண்டும்! விளாசிய பிரியங்கா காந்தி! - Seithipunal
Seithipunal


காட்டுமிராண்டித்தனத்திற்கு பெரும்பாலான மேற்கிந்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அங்குள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அமெரிக்க எம்.பிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வந்ததை கண்டித்து பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அமெரிக்க தேசிய கொடியை எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனையடுத்து 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் நாடாளுமன்ற  பேசிய நேதன்யாகு காசா மீதான தாக்குதலை நியாயப்படுத்தினார். இந்தப் போர் காட்டுமிராண்டித்தனத்திற்கும், நாகரிகரித்திற்கும் இடையிலான போர் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கமான எக்ஸ் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்த கருத்து முற்றிலும் சரியானது. அவருடைய அரசும் காட்டுமிராண்டித்தனமானது.

அவருடைய காட்டுமிராண்டித்தனத்திற்கு பெரும்பாலான மேற்கிந்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதை பார்ப்பதற்கு மிகவும் அவமானமாக உள்ளது. காசாவில் நடக்கும் கொடூரமான இனப்படுகொலைக்கும் தாய்மார்கள், பொதுமக்கள், தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், உட்பட பல அப்பாவி மக்கள் குரல் கொடுத்ததால் மட்டும் போதாது.

காசவிற்கு குரல் குடுப்பது இஸ்ரேல் குடிமக்கள் மட்டும் ஒவ்வொரு நபர் மற்றும் உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கத்தின் தார்மீக பொறுப்பாகும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Gandhi said that most of the West Indian countries are giving huge support to the barbarism


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->