இஸ்ரேல்: நீதித்துறை சட்டங்களின் மறுசீரமைப்பிற்கு எதிராக தொடரும் போராட்டம்.!
Protest continues against judicial reforms in isreal
ஐரோப்பிய நாடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்ற பின்பு, நீதித்துறை மறு சீரமைப்பிற்காக பல புதிய சட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டார். இந்த புதிய நிதித்துறை சட்டத்தில், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதன் மூலம், நீதிமன்றத் தீர்ப்புகளை ரத்து செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும்.
இதனால் உச்ச நீதிமன்றம் பலவீனப்படுத்தப்படும் என்றும், சட்ட ஆலோசர்கள் மற்றும் நீதிபதிகளின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் சட்ட வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும் நீதித்துறை சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக இருக்கும் இச்சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் கடந்த 8 வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இஸ்ரேல் தலைநகர் டெலி அவிவில் இரண்டு இடங்களில் போராட்டக்காரர்கள் அணிவகுத்து, கொடிகளை அசைத்தும், நீதி அமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே பல முக்கிய சாலைகளை போராட்டக்காரர்கள் வழி மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், காவலர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
Protest continues against judicial reforms in isreal