ரஷ்யாவிற்குள் அத்துமீறி தாக்குதல் நடத்திய உக்ரைன் படையினர்; சரணடைந்தால் உயிருடன் விடுவோம் என புடின் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


உக்ரைன் ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப்  இந்த போர் நிறுத்த உடன்படிக்கைக்கு தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில், “தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால், அவர்களை உயிருடன் விடுவோம்,” என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போரை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கிடையே, ரஷ்யா வின் குர்ஸ்க் பகுதிக்குள் அத்துமீறி 1000ற்கும் மேற்பட்ட உக்ரைன் படையினர்  நுழைந்து தாக்குதல் நடத்தினர். 

இதையடுத்து, ரஷ்ய படையினர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்ததுடன், கடும் சித்ரவதை செய்வதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், 'இரண்டாம் உலகப்போருக்குப் பின் இத்தகைய கொடூர செயலை இந்த உலகம் பார்க்கவில்லை. எனவே, உக்ரைன் வீரர்களை உயிருடன் விடுவிக்கும்படி ரஷ்ய அதிபர் புடினை கேட்டுக்கொள்கிறேன்' என, குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ரஷ்ய அதிபர் புடின் பதிலளிக்கையில், “ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய உக்ரைன் வீரர்களை, எங்கள் படையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை மனிதாபிமான முறையில் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம். ஆனால், அவர்கள், தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால் அனைவரும் உயிருடன் இருப்பர்; சர்வதேச சட்டத்தின்படி மரியாதையுடனும் நடத்தப்படுவர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,  'எங்கள் நாட்டு வீரர்கள் யாரும் ரஷ்ய படையால் சுற்றி வளைக்கப்படவில்லை' என, உக்ரைன் அரசு மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Putin warns that the Ukrainian soldiers who trespassed into Russia will be released alive if they surrender


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->