குரானை மீண்டும் மீண்டும் எரித்தவர் சுட்டுக் கொலை! அதிர்ச்சியில் உலக நாடுகள்!
Quran burnt Salwan Momika
கடந்த 2023 ஆம் ஆண்டு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மசூதிக்கு வெளியே நடந்த போராட்டத்தில் ஒருவர் குரானை எரித்தார். இந்த செயலுக்கு பல இஸ்லாமிய நாடுகள் ஸ்வீடனை கடுமையாக கண்டித்தன.
ஈராக்கில் பிறந்த அகதியான சல்வான் மோமிகா என்பவர், முஸ்லிம்களின் புனித நூலான குரானை எரித்தவர். இதன் காரணமாக, ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது தேசியக் குழுவிற்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஸ்வீடனில் மீண்டும் மீண்டும் குரானை எரித்த சல்வான் மோமிகா சுட்டுக் கொல்லப்பட்டார். முந்தைய நாள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததை போலீசார் உறுதி செய்தனர்.
குரான்களை எரித்த ஈராக்கிய கிறிஸ்தவரான சல்வான் மோமிகா இன வெறுப்பைத் தூண்டும் குற்றவாளியா என்பதை ஸ்டாக்ஹோம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிப்பதாக இருந்தது.
ஆனால் சல்வான் மோமிகா இறந்துவிட்டதால், கூடுதல் அவகாசம் தேவை என்று கூறி தீர்ப்பை பிப்ரவரி 3-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Quran burnt Salwan Momika