ராஜபக்சே சகோதரர்கள் உட்பட 4 பேருக்கு கனடாவில் நுழைய தடை.!! - Seithipunal
Seithipunal


அந்நிய செலாவணி பற்றாக்குறை, அரசியல் குழப்பம் மற்றும் பணவீக்கத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஆட்சியில் இருந்த கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே பதவி விலகினர். இதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கே இலங்கை அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபரான கோத்தபய ராஜபக்சே மற்றும் முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சே மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட 4 பேரை கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

இதையடுத்து கனடாவில் அவர்களது சொத்துக்கள் மற்றும் நிதி தொடர்பான சேவைகள் அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்படுவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இந்த 4 பேரின் மீது பொருளாதார தடை விதிப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajabakse brothers including 4 banned to enter canada


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->