நீட் தேர்வு விலக்கு கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் - கர்நாடகா அரசு அதிரடி அறிவிப்பு.!
resolution against neet exam in karnataga assembly
சமீபத்தில் நடந்த இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது என்று பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, "தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும்" என்று வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.
இதேபோல், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்று டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட எட்டு மாநிலத்தின் முதலமைச்சர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவையில் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நீட் விலக்கு கோரி மேற்கு வங்க சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
resolution against neet exam in karnataga assembly