இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு உள்ள கட்டுபாடுகள் என்னென்ன? தெரியுமா உங்களுக்கு? - Seithipunal
Seithipunal


இந்தியா உட்பட இந்த உலகையே தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்த இங்கிலாந்து நாட்டில் இன்றும் மன்னர் பரம்பரை கொடி கட்டி பறந்து கொண்டிருக்கின்றது. இங்கிலாந்து ராணியின் அதிகார வரம்பும், அவர்களின் கட்டுப்பாடு மிகுந்த நடைமுறைகளும் தற்போதுவரை முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தை ஆளும், ராணிக்கோ, மன்னருக்கோ உலகின் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும், விமானத்தில் இலவசமாக உயர் வகுப்பில் பயணிக்கும் உரிமை உண்டு. ஆளும் மன்னருக்கோ அல்லது ராணிக்கோ பாஸ்போர்ட், விசா என எதுவும் தேவையில்லை. 

மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் அரசிடம் இருந்து மாத ஊதியம் வழங்கப்படுகிறது. அந்த ஊதியத்திற்குள் தான் அவர்கள் செலவு செய்தாக வேண்டும். அதற்கு மேல் தேவைப்பட்டால், வாங்கிய ஊதியத்தில் செய்த செலவு கணக்குகளை பொய் இல்லாமல் சரியாக ஆதாரத்துடன் ஒப்படைத்த பிறகு, ராணி அல்லது மன்னரின் அனுமதிக் கடிதத்திற்குப் பிறகு தான் கூடுதலாக பணம் கிடைக்கும்.

இந்த ஊதிய வரைமுறையில் மருத்துவச் செலவுகளுக்கு விதி விலக்கு உண்டு. மன்னர் குடும்பத்தினரின் மாத ஊதியம் மக்களின் வரிப் பணத்தில் இருந்தே வழங்கப்படுவதால், அந்த கணக்குகளை, முறையாக பராமரித்து வர வேண்டும்.

மன்னர் அல்லது ராணியின் குடும்பத்தின் சொத்துக்கள் அனைத்தையும் அவரின் வாரிசுகளும், இளவரசர்களும், அவரின் குடும்பத்தினரும் அனுபவித்துக் கொள்ளலாம். அந்த சொத்துக்களை விற்கவோ, பிறர் பெயருக்கு மாற்றவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. 

உடைகளை பொறுத்தவரை இளவரசரின் மனைவிகள், வரைமுறைப்படுத்தப்பட்ட பாரம்பரியமான உடைகளைத் தான் உடுத்த வேண்டும். விழாக்களில் கலந்து கொள்ள விரும்பினால் அதற்கு கட்டுப்பாடுகள் மிக அதிகம். 

மன்னர் குடும்பமே ஆனாலும், எந்த உணவையும் வீணடிக்க கூடாது. இரவு உணவு மீதமாகிப் போனால், நம் வீட்டில் மீதமுள்ள பழைய சோற்றை தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் பயன்படுத்துவதைப் போல மன்னர் வீட்டிலும் உணவு மீதம் இருந்தால் அதை வீணாக்காமல், பதப்படுத்தி வைத்துக்கொண்டு அடுத்த நாள் உண்ண வேண்டும். உணவு கெட்டுப் போனால், அதற்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை அரண்மனையில் உண்டு.

மேலும் பயன்படுத்தி வரும் ஆடை கிழிந்து போனால், அதை அரண்மனை தையல்காரரிடம் கொடுத்து தைத்து பயன்படுத்த வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே, மன்னரின் குடும்பத்தில் உள்ள அனைவரும், தங்களுக்கு வேண்டிய உடைகளை மொத்தமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற விதியும் நடைமுறையில் உள்ளது.

மன்னர் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் 20 வயதானவுடன், இரண்டு ஆண்டுகள் பிரிட்டன் ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. அங்கு கொடுக்கப்படும் உணவையே உட் கொண்டு சக ராணுவ வீரரைப் போல் தான் இருக்க வேண்டும்.

பின்னர், பிரிட்டன் அரசு நிர்வாகத்தில் பணி புரிய வேண்டும். அத்துடன், அரண்மனைக்கான வருவாயைப் பெருக்குவதற்குண்டான வழி முறைகளையும், கையாளத் தெரிந்திருக்க வேண்டும். மன்னரின் குடும்பத்திலிருந்து விலகிக் கொள்பவர்களுக்கு, வரிப் பணத்தில் எந்த விதமான ஓய்வூதியமோ, கருணைத் தொகையோ வழங்கப்பட மாட்டாது. 

அரண்மனைக்கு, எந்த நாட்டின் அதிபர் விருந்தினராக வந்தாலும், டைனிங் டேபிளில், ராணி அமர்ந்த பிறகு தான் விருந்தினராக வந்தவர்கள் அமர வேண்டும். இவ்வாறு இங்கிலாந்து மன்னர் குடும்பத்தினருக்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள், காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இப்படி பல கடுமையான கட்டுப்பாடுகளை தற்போது வரை பின்பற்றுவதால் தான், இன்றும் மன்னர் குடும்பமாக உலகில் செல்வாக்காக வலம் வர முடிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rules and regulations for The monarchs family in england


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->