உக்ரைனில் மேலும் ஓர் அணுமின் நிலையப் பகுதியில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்.!
Russia attacks Pivdennoukrainsk Nuclear Power Plant in ukraine
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரின் தொடக்கத்திலிருந்தே ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஸியா அணு மின் நிலையப் பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
மேலும் ஸபோரிஸியா அனுமின் நிலையப் பகுதியை சுற்றி நடந்து வரும் தாக்குதலால் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் உக்ரைனின் பிவ்டெனூக்ரெயின்ஸ்க் நகரில் அமைந்துள்ள 'தெற்கு உக்ரைன் அணு மின் நிலையம்' என்று அழைக்கப்படும் அணுமின் நிலையப் பகுதியை சுற்றி ரஷ்யபடைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அணுமின் நிலையப் பகுதியை நிர்வகிக்கும் எனா்கோடாம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அணுமின் நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் ஏவுகணை வெடித்ததாகவும், இதனால் அணுமின் நிலையத்தில் உள்ள மூன்று உலைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Russia attacks Pivdennoukrainsk Nuclear Power Plant in ukraine