மீண்டும் கோரமுகத்தை காட்டும் ரஷ்யா; உக்ரைன் அனல்மின் நிலையம் மீது 143 டிரோன்களை ஏவி தாக்குதல்..!
Russia launched 143 drones to attack a Ukrainian thermal power plant
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 03 வருடங்களாக போர் நடைபெற்று வருகிறது. குறித்த போர் தொடங்கியபோது ரஷியா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது.
பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக வலுவாக சண்டையிட ரஷ்யாவின் பல இடங்களில் பின்வாங்க தொடங்கியது.

தற்போது இரு நாடுகளும் மீண்டும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் ராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் ரஷ்யா 143 டிரோன்களை ஏவியதாகவும் அதில், 95 டிரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது என்றும் 46 டிரோன்கள் இலக்கை அடையவில்லை என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Russia launched 143 drones to attack a Ukrainian thermal power plant