தொடர் ஏவுகணை தாக்குதல்: உக்ரைனின் 5 கண்காணிப்பு நிலைகளை அழித்த ரஷ்யா....! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான உக்ரைன் கடந்த ஆண்டு சர்வதேச எல்லை பாதுகாப்பு காரணங்களுக்காக நேட்டோ அமைப்பில் இணைய விரும்பியது. இதை எதிர்த்து ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. இதைத்தொடர்ந்து, ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே ஓராண்டிற்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைன் கிழக்கு பகுதிகளை கைப்பற்றி ரஷ்யா முன்னறி வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பாக்முட்ஸ்க், அவ்திவ்ஸ் க்ஷக்தர்ஸ்க் பகுதிகள், குப்யான்ஸ்க் மற்றும் லைமான்ஸ் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குப்யான்ஸ்க் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 5 போர் கண்காணிப்புகளை நிலைகளை அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளார். 

மேலும் ரஷ்ய ஏவுகணைகளை குறி வைத்து தாக்குவதில் உக்ரைன் கண்காணிப்பு நிலைகள் முக்கிய பங்கு வகித்ததால் அவை அழிக்கப்பட்டதாக ஸ்புட்னிக் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia missile attack destroys 5 observation posts of Ukraine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->