ஓராண்டை கடந்த போர்.! முதல் முறையாக உக்ரைன் சென்ற ரஷ்ய அதிபர் புதின்.!
Russia president Putin visits mariupol city ukraine
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் ஜபோரிஜியா, சோலாடர், லுகான்ஸ்க் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. மேலும் உக்ரைனின் கிழக்கு நகரங்களை கைப்பற்றுவதற்கு அதிக அளவு படைகளை குவித்து தாக்குதல் நடத்திவருகிறது.
இதனிடையே உக்ரைனில் ரஷ்யப்படைகள் குழந்தைகளை நாடு கடத்திய குற்றத்திற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் போர் தொடங்கி ஓராண்டிற்கு பின் முதல்முறையாக ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு சென்றுள்ளார்.
இதில் கடந்த வருடம் மே மாதம் உக்ரைனில் கைப்பற்றப்பட்ட மரியுபோல் நகரத்தை அதிபர் புதின் பார்வையிட்டார். ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள மரியுபோல் நகரத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் கார் மூலம் திரையரங்கு மற்றும் பல்வேறு கட்டிட பணிகளை மேற்பார்வையிட்டார். மேலும் ரஷ்ய அதிபரின் மரியுபோல் பயணம் உக்ரைன் போரில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
English Summary
Russia president Putin visits mariupol city ukraine