கடுங்குளிருக்கு மத்தியில் உக்ரைன் மீது ஏவுகணை மழை பொழிந்த ரஷ்யா.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது ரஷ்யா சுமார் 60 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

தலைநகர் கீவ் நகரில் மட்டும் சுமார் 40 ஏவுகணைகள் வீசப்பட்டன. ஆனால் உக்ரைன் வான் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் 37 ஏவுகணைகள் வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டன. இதையடுத்து கார்கீவ் பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் அங்கு குடிநீர் மற்றும் மின்சார சேவைகள் தடைப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் லான்ட்ராடிவ்கா பகுதியில் 8 பேரும், ஸ்வாடோவ் பகுதியில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் நகரங்களின் பெரும்பாலான பகுதிகளில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால் மக்கள் சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோ நிலையங்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia rained missile on Ukraine despite severe snow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->