அமைதி பேச்சுவார்த்தைக்கு ரெடியான ரஷிய.. கருத்து தெரிவிக்காத உக்ரைன்.. என்ன நடக்கிறது உக்ரைனில்?
Russia ready for peace talks Ukraine does not comment Whats going on in Ukraine?
3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல்முறையாக உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷியா அறிவித்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் ரஷியா இடையேயான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டம் ஆகி ஏராளமான பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.
3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட அன்றைய தினம் மட்டும் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.ஆனாலும், அன்றைய தினம் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டினார். இதையடுத்து ஒரு நாள் தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில் போர் நேற்று மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் அவர் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல்முறையாக உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ரஷியா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.புதினின் இந்த அறிவிப்பு தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
English Summary
Russia ready for peace talks Ukraine does not comment Whats going on in Ukraine?