தங்க கடத்தல் வழக்கு; நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு..!
Actress Ranya Rao bail application postponed
தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்க வருவாய் புலனாய்வுத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரன்யா மீது ஜாமின் மனு மீதான விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

அதாவது, அடிக்கடி துபாய் சென்று வந்துள்ள ரன்யா ராவ் இதுவரை 100 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.ரன்யா ராவ் எப்படி 100 கிலோ தங்கத்தை கடத்தி வந்தார் என்பதற்கான ஆதாரங்களையும் டி.ஆர்.ஐ. தாக்கல் செய்திருந்தது.
இது தொடர்பில், நடிகை ரன்யா ராவின் தந்தையும் காவல் அதிகாரியுமான ராமச்சந்திர ராவிடம் விசாரணை நடத்தாததற்கு காவல்துறை கண்டனம் தெரிவித்தது. தற்போது விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், நடிகை ரன்யா ராவ் ஜாமின் மனு மீதான தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Actress Ranya Rao bail application postponed