ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி.. மணலில் சிற்பம் செய்த கலைஞர்.!
Russia-Ukraine war to stop Art sculptor in the sand.!
ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் 9வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை தீவிரப் படுத்தியுள்ளது.
பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா உக்ரைன் போரை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில் ஒரிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வகையில் ஒரிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வரைந்து ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துங்கள் என வலியுறுத்தும் விதமாக மணல் சிற்பம் வடிவமைத்துள்ளார்.
இவர் உலக நடப்புகள் அனைத்தையும் மணல் சிற்பமாக வடித்து தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். மேலும் இவர் வடித்த மணல் சிற்ப்பங்களுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Russia-Ukraine war to stop Art sculptor in the sand.!