ரஷியா உக்ரைன் போர்! வடகொரியாவுக்கு குதிரைகளை பரிசாக வழங்கிய ரஷியா!
Russia war in Ukraine Russia gifted horses to North Korea
ரஷிய அதிபர் புதின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடகொரியா வந்திருந்தார். உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அதற்கு பரிசாக குதிரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தென் கொரியா தெரிவித்து இருப்பது:-
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷியா உக்ரைன் போர் நடந்து வருகிறது.இந்த போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி கூறும் விதமாக ரஷியாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பின்னர், வடகொரியா அதிபர் கிம் ஜாங்-க்கு குதிரைகள் என்றால் கொள்ளை இஷ்டமாம். ஏற்கனவே புதின் 30 குதிரைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அனுப்பி உள்ளார். இவை அனைத்தும் வடகொரியா அனுப்பிய ஆயுதத்திற்கான பணம் என தென் கொரியா தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கேசிஎன்ஏ கூறியிருப்பதாவது:
ரஷிய அதிபர் புதின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடகொரியாவுக்கு வந்திருந்தார். அப்போது இருநாடுகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கடந்த ஜூன் மாதத்தில் ரஷிய அதிபர் புதினுக்கு நாய்கள் ஒரு ஜோடிஅனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மாறாக, ஆகஸ்ட் மாதத்தில் 447 ஆடுகளை புதின், கிம் ஜாங் உன்னுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
English Summary
Russia war in Ukraine Russia gifted horses to North Korea