பெர்லின் : சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ரஷ்ய பெண்களுக்கு திடீர் உடலநலக்குறைவு.!
russia woman admitted hospital after attend ther berlin conference in germany
பெர்லின் : சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ரஷ்ய பெண்களுக்கு திடீர் உடலநலக்குறைவு.!
ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் பகுதியில் கடந்த மாதம் 26, 30-ந் தேதிகளில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷியா உள்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரஷிய நாட்டை சேர்ந்த இரண்டு பெண் பத்திரிகையாளர்களுக்கு நாடு திரும்பியவுடன் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஒரு பெண் தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஷிய அதிகாரிகள் விசாரணை தீவிரபடுத்தினர்.
அதில், "ரஷிய அரசாங்கத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது விஷ தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி சைபீரியாவில் இருந்து திரும்பும் வழியில் உடல்நலம் சரியில்லாமல் போனதும், அவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததும் தெரிய வந்தது.
English Summary
russia woman admitted hospital after attend ther berlin conference in germany