2020-இல் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் உக்ரைன் உடன் போர் வந்திருக்காது என்கிறார் ரஷ்யா அதிபர் புடின்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தான் அதிபரானதும், ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

இது குறித்து, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ' நான் அதிபராக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்கவே இருக்காது. இந்த அபத்தமான போரை உடனடியாக நிறுத்த வேண்டும். இதை எளிதாகவும் செய்யலாம். கடினமாகவும் செய்யலாம். ஆனால், எளிமையாக போரை நிறுத்துவதே சரியானது. தற்போதைய போர் அபத்தமானது. உடனடியாக அதை நிறுத்துவதற்கு ரஷ்யா முன் வர வேண்டும்' எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஷ்யாவின் அதிபர் புடின் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: 2020 தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால், அப்போது அதிபராக இருந்திருந்தால் 2022-இல் உக்ரைன் போர் வந்திருக்காது. 

டிரம்ப் புத்திசாலி நபர் மட்டுமல்ல. ஒரு நடைமுறை சார்ந்த நபரும் கூட. அமெரிக்காவின் உதவியுடன், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian President Putin says that if Trump had won in 2020 the war with Ukraine would not have come


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->