இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாக்களுக்கு சவுதி அரேபியாவில் தடை; மீறினால் 05 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாக்களுக்கு சவுதி அரேபியா தற்காலிகமாக  தடை விதித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, ஈராக், இந்தோனேசியா, ஏமன் உள்ளிட்ட 14 நாடுகளின் விசாக்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

2025-ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 04-ஆம் தேதி முதல் 09-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்நிலையில், முறையாக பதிவு செய்யாமல் ஹஜ் புனித யாத்திரை செல்லும் தனி நபர்களை தடுப்பதற்காக சவுதி அரேபியா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், விதிகளை மீறுவோர் கண்டறியப்பட்டால் எதிர்காலத்தில் 05 ஆண்டுகளுக்கு  தடையை எதிர்கொள்ள நேரிடும் என்று சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரையின்போது, 1,200 பக்தர்கள் பலியானார்கள். அதிக மக்கள் நெருக்கடியால், வெப்பம் அதிகரிக்க வழியேற்பட்டது. இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டது. 

வெளிநாட்டினர் பலரும் உம்ரா விசாக்கள் அல்லது வருகைக்கான விசாக்களுடன் கடந்த காலங்களில் சவுதி அரேபியாவுக்குள் நுழைந்து, அதிகாரப்பூர்வ அங்கீகாரமின்றி கூடுதலான நாட்கள் தங்கி, சட்டவிரோத வகையில் ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்கிறார்கள். இதனை தடுக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Saudi Arabia bans visas from 14 countries including India warns of 5 year ban if violated


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->