சவுதி அரேபியா: உலகின் மிகப்பெரிய கட்டிடம் கட்ட திட்டம் - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்கும் சவுதி அரேபியா உலகின் மிகப்பெரிய கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ளது.

இதன்படி வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும், சவூதி பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவுறுத்தலின்படி வானுயர்ந்த கட்டிடங்களை உருவாக்க வடிவமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மிரர் லைன் என்று பெயரிடரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் சவுதி அரேபியா 75 மைல் நீளத்திற்கு இரு புறங்களிலும் 1600 அடி உயரமுள்ள வானளாவிய கட்டிடங்களை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.

மேலும் கட்டிடங்களின் கீழ், அதிவிரைவு ரயில் இயக்குவதற்கும், நிலத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதும், இந்த திட்டத்தில் அடங்கும்.

இந்த திட்டம் கட்டி முடிக்கப்பட்டால் உலகின் மிகப்பெரிய கட்டுமானமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்ற ஒரு லட்சம் கோடி டாலர்கள் செலவாகும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Saudi Arabia plans to build world longest building


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->