இலங்கையில் நெருக்கடியான சூழல்! நாளை பள்ளிகளை மூட உத்தரவு.!
Schools closed in Srilanka
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழல் காரானமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அதிபர் கோத்தபய ராஜபக்சே தான் என்றும், அவர் பதவி விலக வலியுறுத்தி அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், இலங்கையில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.
இந்த சூழலை கருத்தில் கொண்டு, அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். அதன்படி, இலங்கை முழுவதும் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் நாளை பள்ளிகளை மூட அந்நாட்டு கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வடக்கு, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, மாகாணங்களில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, போராட்டங்கள் செய்ய திட்டமிடுவதை தடுக்கும் வகையில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ-டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Schools closed in Srilanka