"இனி ஒரு நாளுக்கு 24 மணி நேரம் இல்ல.. 25 மணி நேரமாம் .." - விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!!
Scientists Saying 25 Hours For One Day
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் - மாடிஸன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக நிலவு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அந்த ஆய்வின் படி பூமியின் நேரம் ஒரு நாளைக்கு 25 மணி நேரமாக அதிகரிக்கப் போவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விஸ்கான்சின் - மாடிஸன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், "நிலவானது பூமியை விட்டு ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ. மீ வீதம் விலகிச் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்வு பூமியின் ஒரு நாளின் நீளத்தை அதிகரிக்கும்.
அந்த வகையில், தற்போது பூமியின் ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக உள்ள நிலையில், இனி அது 25 மணி நேரமாக அதிகரிக்கும். ஆனால் இந்த மாற்றம் இப்போது நடக்காது. இது நடக்க இன்னும் சுமார் 20 கோடி ஆண்டுகள் ஆகும்.
முன்னதாக சுமார் 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் ஒரு நாளானது 18 மணி நேரமாக மட்டுமே இருந்துள்ளது என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகே ஒரு நாளின் நேரம் 24 மணி நேரமாக மாறியுள்ளது. அதன்படி மேலும் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் நாளின் நீளத்தில் மாற்றம் ஏற்படும்.
நிலவு , பூமியை விட்டு மெதுவாக விலகிச் செல்வதால் தான் பூமியின் சுழலும் வேகமும் குறைகிறது. இதனால் பகல் நேரம் அதிகரிக்கும்" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Scientists Saying 25 Hours For One Day