ஷேக் ஹசினாவை உடனே எங்க நாட்டுக்கு அனுப்புங்க....இந்தியாவிடம் வலியுறுத்திய வங்கதேச எதிர்க்கட்சி! - Seithipunal
Seithipunal


அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து மாபெரும்  புரட்சி போராட்டம் நடத்தினர். இந்த புரட்சி நாளடைவில் மிகப்பெரும்  வன்முறையாக வெடித்தது.

இதன் காரணமாக அந்நாட்டில் பிரதமராக இருந்த   விலகிய ஷேக் ஹசினா, தொடர்ந்து பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து வங்கதேச நாட்டில் உள்ள நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், அங்கு ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு, போராட்டத்தை முறியடிக்க சதி திட்டம் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஷேக் ஹசினாவை தங்கள் நாட்டிற்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று, இந்தியாவிடம் வங்கதேச எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே ஷேக் ஹசீனா 1996-ஆம் ஆண்டு முதன் முறையாக பிரதமராக தேர்வான போதே இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். தொடர்ந்து 2022-ஆம் அண்டு இந்தியாவுக்கு வருகை தந்த போது, இந்தியா, இந்திய அரசு, இந்திய மக்கள் மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலையில் முக்கிய பங்காற்றியதை அவர் நினைவுகூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Send Sheikh Hasina to our country immediately Bangladesh opposition urged India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->