படுகாயம்!!! திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!- கனடா விடுதியில்.... - Seithipunal
Seithipunal


கனடா டொராண்டோவில் ஸ்கார்போரோ நகரில் கேளிக்கை விடுதி ஒன்று இருக்கிறது. அந்த விடுதியில் கார் மூலமாக வந்த நபர் உள்ளே நுழைந்து திடீரெனத் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட ஆரம்பித்தார்.இதனால் விடுதியில் உள்ள மக்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் சில நொடிகள் குழம்பி இருந்தனர். பின்னர் சத்தத்தை அறிந்து துப்பாக்கிச்சூடு என்பதை அறிந்து பலர் பதறி அங்கும் இங்கும் அலைந்தனர். மேலும் இந்தத் தாக்குதலில் கேளிக்கை விடுதியில் இருந்த 12 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மர்ம நபர் சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல்:

இந்தத் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் காரில் அங்கு வந்ததாகவும் பின்னர் அதே காரில் சம்பவ பகுதியில் இருந்து தப்பியதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தப்பி சென்ற மர்ம நபரைப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தத் தகவலை கேட்ட டொராண்டோ நகர மக்கள் முழுவதும் அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Serious injury A mysterious person suddenly opened fire At a Canadian torondo pub


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->