குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதிய ரஷ்ய ராணுவ விமானம் - 6 பேர் பலி
Six died in aircraft collide with 9 storey building
ரஷ்யாவில் ராணுவ விமானநிலையத்திலிருந்து சுகோய் சு-34 விமானம் பயிற்சி மேற்கொள்வதற்காக புறப்பட்ட பொழுது திடீரென தீப்பிடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து எயிஸ்க் நகரில் உள்ள 9 மாடி குடியிருப்புக் கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தினால் கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து 9வது தளம் வரை தீ பிடித்ததில், அனைத்து தளங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தன.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் விமானத்திலிருந்து ராணுவ விமானி குதித்து உயிர் தப்பிய நிலையில், இதுவரை இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 15 படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்ஜினில் தீப்பிடித்ததே விமானத்தின் விபத்திற்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Six died in aircraft collide with 9 storey building