சிரியாவில் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி குடியிருப்பு - 16 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


சிரியா நாட்டின் வடக்கு நகரமான அலப்போ நகரில் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டிடத்தில், 30 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இந்த கட்டிடம் திடீரென சரிந்து விழுந்தது. 

இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி குழந்தை உள்பட மொத்தம் பதினாறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு பலியானவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, நடத்தப்பட்ட விசாரணையில், கட்டிடத்தின் அடிப்பகுதி நீர்கசிவினால், பலவீனமாக இருந்ததால் இடிந்து விழுந்ததாக தெரிய வந்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixteen peoples died for building collapse in syria


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->