ஒரு குழந்தைக்கு ரூ.62 லட்சம் - அதிர்ச்சி கொடுத்த தென்கொரியா நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு 0.78 ஆக இருந்த பிறப்பு விகிதம், வரும் 2026ஆம் ஆண்டில் 0.59 ஆக சரியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், 1977ஆம் ஆண்டுக்கு பின்பு இல்லாத வகையில், மக்கள் தொகை 3.5 கோடி அளவிற்கு சரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், பியாங்யாங் (Booyoung) குழுமம் என்ற கட்டுமான நிறுவனம், ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஊழியர்களுக்கு ரூ.62 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

அதேபோன்று, மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு ரூ.1.82 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் குழந்தை பெற்றுக் கொண்ட தனது ஊழியர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் ரூ.43.58 கோடி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் டிராவல் ஏஜென்சியான Trip.com என்ற சீன நிறுவனம், தங்களது ஊழியர்களின் குழந்தைக்கு ஒன்றிலிருந்து ஐந்து வயது ஆகும் வரை ஒவ்வொரு வருடமும் இந்திய மதிப்பில் ரூ.1.1 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixty two lakhs provide to employees for born baby in south koriean


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->