"சிரிக்கும் ஸ்பிங்க்ஸ் சிலை" எகிப்தில் கண்டுபிடிப்பு..!! - Seithipunal
Seithipunal


எகிப்தில் ஸ்மைலி ஸ்பிங்க்ஸ் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நைல் நதியின் கிழக்குக் கரையில் உள்ள தெற்கு எகிப்திய நகரமான கெனாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், நாட்டின் சிறந்த பாதுகாக்கப்பட்ட பழங்காலத் தலங்களில் ஒன்றான ஹத்தோர் கோயிலுக்கு அருகே ஆராய்ச்சி மேற்கொண்டபோது சிரிக்கும் முகம், இரண்டு பள்ளங்கள் கொண்ட ஸ்பிங்க்ஸ் சிலை மற்றும் சன்னதியின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர். 

கிசாவின் பிரமிடுகளில் உள்ள புகழ்பெற்ற ஸ்பிங்க்ஸ் சிலைகளை விட இந்த ஸ்பிங்க்ஸ் சிலை மிகச்சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கி.பி 41 மற்றும் 54 க்கு இடையில் ரோமானிய ஆட்சியை வட ஆபிரிக்காவில் விரிவுபடுத்திய ரோமானிய பேரரசர் கிளாடியஸ் உருவத்தில் செய்யப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

மேலும் சிரிக்கும் ஸ்பிங்க்ஸைத் தவிர, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ரோமானிய கால கல் பலகைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கல் பலகையில் உள்ள அடையாளங்கள் குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்றும், இது சிலையின் அடையாளம் மற்றும் பகுதி பற்றிய கூடுதல் தகவல்களை வெளிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Smiling sphinx statue discovered in Egypt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->