முடக்கப்பட்ட சமூக வலைதளங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியதாக இலங்கை அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


முடக்கி வைக்கப்பட்டிருந்த சமூக வலைதளங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம், அதிபர் கோத்தபய ராஜபட்ச தான் என்று கூறி, அவர் பதவி விலகக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தையடுத்து, இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தாா்.

இதனை எதிர்த்து பொதுமக்கள், மாணவர் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் கொழும்புவில் எதிர்க்கட்சி எம்பிக்கள், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பேரணி நடத்தினர். 

போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

தற்போது இலங்கை முழுவதும் சமூகவலைதளங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனை இலங்கை தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் உறுதி செய்துள்ளன. பொதுமக்களின் அத்தியாவசிய தெந்வைகளை கருத்தில் கொண்டு சமூக வலைதளங்கள் மீண்டும் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social media in Sri Lanka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->