ராணுவ பயிற்சி தளத்தில் தீ விபத்து- 6 ராணுவ வீரர்களை இழந்த தென் ஆப்பிரிக்கா! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்கா, வடக்கு கேப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ராணுவ பயிற்சி தளத்தில் ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது பயிற்சி தளத்துக்கு அடுத்துள்ள சுரங்கத்தில் திடீரென தீப்பிடித்து வேகமாக ராணுவ பயிற்சி தளத்துக்கு பரவியது. 

இந்த தீ விபத்தில் ராணுவ முகாம் மற்றும் அங்கிருந்த ராணுவ வாகனங்கள் போன்றவை தீப்பற்றி வேகமாக ஏரிய தொடங்கியது. 

இது தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். 

இருப்பினும் 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 இராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணுவ உயர் அதிகாரிகள், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

South Africa army training base fire lost 6 soldiers


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->