பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 45 பேர் பரிதாப பலி!தென்னாப்பிரிக்காவில் சோகம்.!  - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்கா, லிம்போபோ மாகாணத்தில் நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு சென்ற பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்னாப்பிரிக்கா, லிம்போபோ மாகாணத்தில் நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு பேருந்தில் புனித பயணம் வந்துள்ளனர். 

அப்போது பேருந்து மார்கென் இடையே உள்ள பாலத்தை கடக்கும் பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் பேருந்தில் பயணித்த 45 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு தீயில் கருகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 8 வயது சிறுமி விமான மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

South Africa bus overturned accident 45 people died 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->