இலங்கையை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேர் கொடூர கொலை: கனடாவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கனடா, பார்ஹேவன் பகுதியில் இலங்கையை சேர்ந்த தர்ஷினி (வயது 35) இவரது கணவர் மகன், மகள்களுடன் வசித்து வந்தார். 

இந்நிலையில் இவர்களது வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டுக்குள் நுழைந்த பார்த்தபோது தர்ஷினி, ஒரு ஆண், 4 குழந்தைகள் என 6 பேரும் கத்திகுத்து காயங்களுடன் பிணமாக கிடந்தனர். 

இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த போலீசார் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தர்ஷினியின் கணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 19 வயது மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan 6 people murder in Canada


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->