இலங்கையின் புதிய அதிபர் பதவிக்கு இரண்டு பெயர்கள் பரிந்துரை.! - Seithipunal
Seithipunal


இலங்கை மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனாவுக்கு இமெயில் தனது பதவியை ராஜினாமா செய்து அனுப்பினார். 

இதற்கு முன்னதாக மாலத்தீவு வந்த கோத்தபய ராஜபட்சே,  இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்தார். இதனை தொடர்ந்து, அவர் இன்று இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்தா ஜெயசூர்யா முன்னிலையில்  பதவியேற்று கொண்டார்.  

இலங்கையின் புதிய அதிபர் பதவிக்கு வருகின்ற 20-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக பாராளுமன்ற செயல்பாடுகளை நிறைவு செய்ய முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அதிபர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க பெயரும், பிரதமர் பதவிக்கு சஜித் பிரேமதாசாவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri lankan president name list


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->