இலங்கை அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடியில் விழுந்த இந்தியாவின் அண்டை நாடான இலங்கை தற்போது மெல்ல மெல்ல படிப்படியாக பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகிறது. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அதிபராக இருந்த ராஜபக்சே பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார். 

இந்த நிலையில் தற்போது இலங்கை அதிபருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தி ஊடகங்களுக்கு இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் "இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பிலும் 1981ம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதி தேர்தல்கள் சட்டத்திலும் கட்டுப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி தேர்தல் நடத்துதற்கு உரிய காலப்பகுதிக்குள் பெயர் குறித்த நியமனம் கூறப்படும் என்பதும்,

தேர்தலை நடத்துவதற்கான திகதியை குறிப்பதற்கு தேர்தல் ஆணையக் குழு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு அமைய 2024 செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் 2024 அக்டோபர் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தினுள் தேர்தல் நடத்தப்படும் என்பது இத்தாள் அறிவிக்கப்படுகிறது என இலங்கை தேர்தல் ஆணைக்குழு சார்பாக தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan presidential election will be held from Sep17 to Oct16


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->