#BigBreaking || 24 மணிநேர முழு ஊரடங்கு., நம் பக்கத்துக்கு நாட்டில் பதற்றமான சூழ்நிலை.!
SriLanka Crisis Lockdown Emergency
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் இன்னலை மக்கள் சந்தித்து வருகின்றனர். உணவு பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொழும்பு நகரில் தினமும் 13 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இராணுவ வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டதால். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென எதிர்கட்சிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்நாட்டில் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.
போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேஷ அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
English Summary
SriLanka Crisis Lockdown Emergency