ராஜபக்சே சகோதரர்கள் கனடாவில் நுழைய தடை - இலங்கை அதிருப்தி - Seithipunal
Seithipunal


அந்நிய செலாவணி பற்றாக்குறை, பண வீக்கம் மற்றும் அரசியல் குழப்பத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கியதையடுத்து, ஆட்சியில் இருந்த கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சேபதவி விலகினர். இதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கே இலங்கை அதிபராக பதவியேற்றார்.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபரான கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சே மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட 4 பேரை கனடாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இலங்கை தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இந்த 4 பேரின் மீது இந்த பொருளாதார தடை விதிப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனடாவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி, கனடா நாட்டின் தூதர் டேனியல் பூட்டை சந்தித்து இலங்கை அரசின் அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, இந்த தடை உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Srilanka displeasure over ban of rajapakse to enter canda


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->