இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தற்பொழுது ஒரே வாய்ப்பு தான் உள்ளது - அதிபர் ரணில் - Seithipunal
Seithipunal


அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களான உணவுப் பொருட்கள், எரிபொருள், உரங்கள் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்களே பதவி விலகினார். இதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். மேலும் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைநகர் கொழும்புவில் தொழிற்சங்க உறுப்பினர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, பொருளாதாரம் இலங்கையில் சீர்குலைந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் பொருளாதார சரிவினால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார நெருக்கடியின் மூலக்காரணம் எது என்பது பற்றி பேசுவது பயனற்றது என்றும், தற்போது இருக்கும் ஒரே வாய்ப்பு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியை பெறுவது மட்டும் தான். இல்லாவிடில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நம்மால் மீள முடியாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilankan president says there is one chance to recover economy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->