மாணவி இறந்ததை கிண்டல் செய்த அமெரிக்க காவல்துறை அதிகாரிகள்! கொந்தளிக்கும் இந்தியா! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா (வயது 23) இவர் அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம் சியாட்டி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். 

இவர் சவுத் லேக் யூனியன் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த காவல் துறை வாகனம் மாணவி மீது மோதியதில் மாணவி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

அந்த காரை காவல்துறை அதிகாரி கெவின் டேவ் என்பவர் அதிவேகத்தில் ஓட்டி வந்ததாக அவருடன் பயணித்த மற்றொரு காவல்துறை அதிகாரி டேனியல் என்பவர் தெரிவித்துள்ளார்.  

விபத்து குறித்து உயர் அதிகாரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு டேனியல் விபத்தில் இருந்தது வழக்கமான பெண்தான் 11 ஆயிரம் டாலர் தயார் செய்து வையுங்கள் அவருக்கு சுமார் 26 வயதில் தான் ஆகும் எனவே பெரிய மதிப்பு தேவையில்லை என தெரிவித்து சிரித்திருக்கிறார். 

இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் காவல்துறை அதிகாரியின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. 

விபத்தில் இறந்த இந்திய வம்சாவளி மாணவியை கேலி கிண்டல் செய்த 2 காவல்துறை அதிகாரிகளின் வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் போலீசார் வெளியிட்டுள்ளனர். 

இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் இந்தியா கண்டனமும் தெரிவித்து வருகிறது. இந்திய துணை தூதரகம், இந்த மோசமான வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. 

மேலும் இந்த சம்பவம் குறித்து வாஷிங்டனில் உள்ள மூத்த அதிகாரிகளிடமும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student death American police officers mocked India condemned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->