மாணவர்கள் உருவாக்கிய அசோக சக்கரம் - உலக சாதனையாக அறிவிப்பு.!
students create ashoka chakaram in puthuchery for republic day
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் குடியரசு தின விழா நாளைய தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு நாடுமுழுவதும் கொடியேற்றப்படும்.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அசோக சக்கரா என்ற உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்சியில் அதே கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 4,500 பேர் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரத்தை உருவாக்கினர். மாணவ-மாணவிகள் ஒன்று சேர்த்து உருவாக்கிய அசோக சக்கரத்தை அமெரிக்க உலக சாதனை குழுமத்தின் அதிகாரி கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் பார்வையிட்டு அதிகாரபூர்வமாக பதிவு செய்து அதற்கான சான்றிதழை வழங்கினார். இதனால், இது உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது.
English Summary
students create ashoka chakaram in puthuchery for republic day