ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்.! சுரங்க மெட்ரோ நிலையங்களில் பாடங்களைக் கற்கும் மாணவர்கள்.!
Students learn lessons in underground metro stations amid Russian missile attack
ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் உக்கிரன் மீது தொடர்ந்து தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகின்றது.
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து ஓராண்டு நிறைவையொட்டி உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை திட்டமிட்டு தலைநகர் கீவ் பகுதியில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இதில் இன்று காலை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக வான் வழியில் தாக்குதல் எச்சரிக்கை அலாரம் ஒலித்து, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய அறிவுறுத்தப்பட்டது.
இதனால் மாணவர்கள் பாதுகாப்பிற்காக தஞ்சமடையும் இடமான சுரங்கம் மெட்ரோ நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. மாணவர்களும் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் ஆர்வமுடன் பாடங்களை கற்றனர்.
English Summary
Students learn lessons in underground metro stations amid Russian missile attack