சூடான் வெள்ளப்பெருக்கு : 60 பேர் பலி....தேள் மற்றும் பாம்பு கடிக்குது....செங்கடல் தலைவர் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


கிழக்கு சூடானில் உள்ள அர்பாத் அணை இடிந்து விழுந்ததில், கடுமையான வெள்ளம் ஏற்பட்டு  60 பேர் பலியாகி உள்ளதாகவும்,  நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக செங்கடல் மாநில நீர் கழக தலைவர் ஓமர் இசா தாஹிர் கூறுகையில், அணை உடைந்ததால் மாநிலத்தின் தலைநகரான போர்ட் சூடானுக்கு அருகிலுள்ள கிராமங்கள் பேரழிவிற்கு உட்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கியவர்களை  மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அணைப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உடனடியாக மீட்புப்பணிகள் தேவைப்படுவதாகவும், தண்ணீரில் இருந்து தப்பிக்கும் நபர்களுக்கு தேள் மற்றும் பாம்பு கடி போன்ற அபாயங்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கனமழை காரணமாக அணை இடிந்து விழுந்ததால், வண்டல் மண்ணுடன் சேர்ந்த கடுமையான வெள்ளம், அருகிலுள்ள கிராமங்களை அழித்து விட்டதாவும்,  இதனால் மீட்பு முயற்சிகல்  கடினமாக உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தது. மேலும் இந்த  அர்பாத் அணை நகரத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudan floods 60 dead scorpion and snake bites Red Sea leader shock news


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->