ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி நேட்டோவில் இணையும் ஸ்வீடன்.! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.?
Sweden join with NATO
ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி அதன் அண்டை நாடான ஸ்வீடன் நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைய உள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் நாடும் நேட்டோ நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும், பின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும், நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக, ஸ்வீடன் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
இந்த விவாதத்தின் போது, பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் பேசினார். அப்போது, நாட்டின் பாதுகாப்புக் கொள்கைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை தற்போது காண்பதாக தெரிவித்தார்.
நேட்டோவில் அங்கம் வகிக்கும்போது, முறையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஸ்வீடனுக்குத் தேவை என்றும், அண்டை நாடான பின்லாந்தும் நேட்டோவில் இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்வீடன் நாடு நேட்டோவில் இணைவதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பாராளுமன்றத்தில் இன்றைய விவாதம் ஒரு சம்பிரதாய விவாதமாகவே இருக்கும் என கருதப்படுகிறது. ஸ்வீடன் அரசு நேட்டோவில் இணையும் தனது விருப்பத்தை விரைவில் முறைப்படி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.