ஜப்பானில் வேகமாக பரவி வரும் 'சதையை தின்னும் பாக்டீரியா' - அறிகுறிகள் என்னென்ன? - Seithipunal
Seithipunal


கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான உயிர்களை காவு  வாங்கி பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்தது. அந்த கொரோனாவே இன்னும் உலகத்தை விட்டு முழுவதும் நீங்காத நிலையில், இப்போது ஒரு பாக்டீரியா தொற்று பரவி வருகிறது.

ஸ்ட்ரெப்ட்டோக்கோக்கல் என்ற பெயருடைய அந்த பாக்டீரியா தாக்கிய ஒருவர், 48 மணி நேரத்தில் மரணித்து விடுவதாக தெரிய வந்துள்ளது. ஜப்பானில் பரவிய இந்த பாக்டீரியா தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பரவி உள்ளதாக தெரிகிறது.

முதலில் மனிதனின் தொண்டையை தாக்கும் இந்த பாக்டீரியாவானது பின்னர் உடல் முழுவதும் வேகமாக பரவி 48 மணி நேரத்திற்குள் உயிரை எடுத்து விடும் அளவுக்கு அபாயகரமானதாக கூறப்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் மனிதனின் தோல் வழியாக உடலுக்குள் ஊடுருவி, முதலில் தொண்டையை தாக்கும். 

தொடர்ந்து உடலுக்குள் சில நச்சுக்களை உருவாக்கி, உடல் திசுக்களை தின்று உறுப்புகளை செயலிழக்க செய்து மரணத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த பாக்டீரியா தாக்கியதற்கான அறிகுறியானது, தொண்டை வலி, கை கால் வலி, உடல் சோர்வு, காய்ச்சல், சுவாச கோளாறு ஆகியவை என்று கூறப்படுகிறது. 

ஆரம்ப அறிகுறியே தொண்டைப் புண் என்று கூறப்படும் இந்த நோய் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவாது என்றும் கூறப்படுகிறது. அறிகுறிகள் தென்பட்டால், கை கால்களை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் மருத்துவரை அணுகி மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Symptoms Of Fast Spreading Flesh Eating Bacteria


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->