நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - பறிபோன 10 உயிர்.!
ten peoples died for flight accident in maleysia
நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - பறிபோன 10 உயிர்.!
ஆசிய நாடான மலேசியாவில் லங்காவி பகுதியிலிருந்து 6 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்களுடன் ஜெட் வேலட் எனும் தனியார் விமானம் செலங்கோரிலுள்ள சுபங்க் விமான நிலையம் நோக்கி பறந்து கொண்டிருந்தது.
இந்த விமானம் தரையிறங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்தின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது.
இதையடுத்து இந்த விமானம் ஷா ஆலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்தவர்கள் உள்பட கார் மற்றும் பைக்கில் பயணித்த இருவர் என்று மொத்தம் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதில் ஷா ஆலம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் தீயுடன் புகை வந்து கொண்டிருப்பதும், விமானத்தின் பாகங்களும் தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ten peoples died for flight accident in maleysia