பரவி வரும் குரங்கு அம்மை.! தடுப்பூசி செலுத்த தாய்லாந்து அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்ட வருகிறது.

ஐரோப்பாவில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆப்பிரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் இதுவரை 2 பேருக்கு இந்த தொற்று உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து அதிக பாதிப்பு மற்றும் ஆபத்தில் உள்ள நபர்களுக்கு குரங்கு அம்மை தடுப்பூசி போட தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக 1000 'டோஸ்' குரங்கு அம்மை தடுப்பூசிகள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வந்து சேரும் என தாய்லாந்து நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதிக்கவும் தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thailand planned to put monkey pox vaacine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->