ஹமாஸ் அமைப்பின் தலைவர் சின்வார் உயிரிழப்பு!...இஸ்ரேல் பிரதமர் உறுதி! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் இஸ்ரேல் பதில் தாக்குல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், தெற்கு காசாவில் ஒரு கட்டடத்தில் நடைபெற்ற தாக்குதலில், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து இந்த தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான சின்வார் உயிரிழந்ததை நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தானுக்கு பெரிய அடியை இஸ்ரேல் கொடுத்துள்ளதாகவும், பணயக் கைதிகளை மீட்கும் வரை ஓய மாட்டோம என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The death of the leader of the hamas organization sinwar israel prime minister confirmed


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->