உணவுக்காக வனவிலங்களைக் கொல்ல முடிவு!...அதிர்ச்சியில் உலக நாடுகள்! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்கும் நமீபியாவில், கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பசி, பட்டினி அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இ கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், நமீபியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருந்தாக குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், அங்கு பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்கக் காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், அந்நாட்டில் உள்ள 30 நீர்யானைகள், 50 ஆப்பிரிக்க சிறுமான்கள், 60 எருமைகள், 100 நீல காட்டுமான்கள், 300 வரிக்குதிரைகள், 83 யானைகள் மற்றும் 100 எலண்ட்கள் அடங்கிய 723 விலங்குகளைக் கொல்வதற்கு நமீபியா அரசு முடிவு செய்து உள்ளதாகவும், இவை தேசிய பூங்காக்கள் உள்ளிட்ட பகுதியிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெறப்படும் என்று செய்திகள் வெளியிட்டுள்ளது.

 மேலும், இந்த வேட்டையாடல் நடவடிக்கையானது அமைச்சகத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொழில்முறை வேட்டைக்காரர்களைக் கொண்டு குறிப்பிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என்றும், இதுவரை 157 விலங்குகள் மாங்கெட்டி தேசிய பூங்காவில் வேட்டையாடப்பட்டிருப்பதாகவும், அதில்  9,56,875 கிலோகிராம் இறைச்சி எடுக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The decision to kill wildlife for food World countries in shock


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->